சூடான செய்திகள் 1

புர்கா, நிகாப் தடையை நீக்க, இந்திய மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

(UTV NEWS) அவசர கால சட்டம் நீக்கப்பட்டது போல முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையான நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீக்க வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா நேரில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் 21திகதி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதிகளாகல் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 250இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம் சமூகத்தையே சந்தேகக் கண் கொண்டு நோக்கும் நிலைமை உருவானதுடன், முஸ்லிம்களால் வெறுக்கப்படும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டாலும் முஸ்லிம் சமூகத்தின் மீதே பழி சுமத்தப்பட்டது. இதனால் முஸ்லிம் சமூகம் முற்றாக மனம் உடைந்து பேரதிர்ச்சியில் அவர்கள் உறைந்து போயுள்ளனர் என தெரிவித்தார்.

Related posts

திருமலையில் மீண்டும் ஆலயம் உடைப்பு

சீனி விலைஅதிகரிக்கப்படமாட்டாது…

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பலத்த பாதுகாப்பு