உள்நாடு

புரெவி சூறாவளி – 200 மி.மீ. வரையான பலத்த மழைவீழ்ச்சி

(UTV | கொழும்பு) –  புரெவி சூறாவளி கிழக்கு கரையோரத்திலிருந்து மேற்கு நோக்கி மன்னார் வளைகுடாவினூடாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று (02) வடக்கு, வட மத்திய, கிழக்கு, வட மேற்கு, மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ ஆகிய மாகாணங்களில் 80 – 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இவை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

இதேவேளை, Burevi சூறாவளியின் காரணமாக இன்று (02) வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் வட மேல் ஆகிய மாகாணங்களில் 200 மி.மீ. வரையான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தற்போதைய அரசாங்கம் கூறியதற்கும், செயற்படுவதற்கும் இடையில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

இலங்கை பிரதமர் – இந்திய பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்

உனவட்டுன புகையிரத நிலையத்திற்கு பூட்டு