விளையாட்டு

பும்ரா புதிய சாதனை

(UTV |  துபாய்) – டி20 போட்டிகளில் இந்திய அணியில் அதிகமான விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ராவும், விரைவாக அரைசதம் அடித்த 2வது இந்திய வீரர் எனும் பெருமையை கே.எல்.ராகுலும் பெற்றனர்.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி, 17.4 ஓவர்களில் 85 ரன்களில் ஆட்டமிழந்தது. 86 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு தொடர்ந்து கிடைத்த 2-வது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 1.619 ரன் ரேட்டுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி 2-வது இடத்தில் இருந்தாலும் புள்ளிகள் அடிப்படையில் நியூஸிலாந்து அணிதான் 2-வது இடத்தில் இருக்கிறது.

Related posts

ரொஜர் பெடரருக்கு மீண்டும் முதல் இடம்

எதிரணியை ஊதிதள்ளிய பாகிஸ்தான் அணி

சன்ரைசர்ஸ் Playoff சுற்றுக்கு தகுதி