சினிமா

புனித மக்காவில் உம்ரா செய்தார் நடிகர் ஷாருக்கான்..!

(UTV | சவூதி) – புனித மக்காவில் உம்ரா செய்தார் நடிகர் ஷாருக்கான்.. புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றன…

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் புதிய படத்தில் ஷாருக்கான் நடித்து வருகின்ற நிலையில், இப்படத்திற்காக
படப்பிடிப்பு காட்சிகளுக்காக லண்டன் சென்று அங்கு படப்பிடிப்புகளை முடி த்துக்கொண்டு, சவுதி அரேபியாவிற்க்கு படப்பிடிப்பிற்க்காக சென்றுள்ளனர். இதேவேளை, சவூதி அரேபியாவின் இயற்கையை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் ஷாருக்கான் வெளியிட்டு வந்துள்ளார்.
சவுதி அரேபியாவில் படப்பிடிப்பை நடத்தியது திருப்திகரமாக உள்ளது. இதுபோன்ற அற்புதமான இடங்களையும், எல்லா இடங்களையும் எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி எனவும் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

படப்பிடிப்பு முடிந்த பின் மெக்கா சென்று உம்ரா செய்துள்ளார். மெக்கா சென்ற ஷாருக்கானுடன் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செல்பி எடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது , வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார் ,

சவுதிஅரேபியாவில் கலாச்சார அமைச்சகத்தின் அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ மற்றும் மெக்காவில் உம்ரா செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. .

Related posts

அஜித் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது -அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்

editor

“மினிகே மகே ஹிதே ” பாடகிக்கு கோல்டன் விசா

 பிரபல நடிகர் சரத்பாபு உயிரிழந்தார்!