சூடான செய்திகள் 1

புனித நூலான திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை…

(UTV|COLOMBO) பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனம் செய்யும் பிரேரணை எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் யுனெஸ்கோ நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் P.டீ.மண்டாவெல தெரிவித்துள்ளார்.

இந்த பிரேரணையை சமர்ப்பிப்பதற்காக 15 பேர் அடங்கிய புத்திஜீவிகள் குழுவொன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

புத்திஜீவிகள் குழுவின் யோசனைகள் அடங்கிய பிரேரணையை ஆராய்ந்ததன் பின்னர் திரிபீடகம் உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்தப்படும் என்று தொல்பொருள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

இன்று(19) பாராளுமன்ற அமர்வை பார்வையிடுவதற்கு மக்களுக்கு அனுமதி இல்லை…

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது

மீள் சுழற்சி இயந்திரத்திற்கான அமைச்சரவை அனுமதி