சூடான செய்திகள் 1

புனித குர்ஆனிலுள்ள விடயங்களை ஆராய தனியான குழு அமைக்கவேண்டும் – ஓமல்பே சோபித்த தேரர்

(UTVNEWS | COLOMBO) -வன்முறையைத் தூண்டும் வகையில் புனித குர்ஆனில் உள்ள விடயங்களை கடைப்பிடிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு தனியான குழுவொன்றை அமைக்க ஜனாதிபதியும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓமல்பே சோபித்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல ஆண்டுகளாக இடம் பெற்ற யுத்தினால் மீண்ட பின்னர் முஸ்லிம்கள் மாத்திரம் ஏன் தனியாக செல்லுகின்றார்கள். அவர்கள் தனியான உணவு, தனியான சட்டம், ஆடை என சகலவற்றிலும் தனியாக செல்லப் பார்க்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் புனித குர்ஆனில் உள்ள சில விடயங்களை தாம் இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொண்டதகவும்
அதில் யுத்தத்துக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும், இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறன போதனைகளை கடைப்பிடிப்பது பற்றி ஆராய தனியான குழுவொன்றை ஜனாதிபதியும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Related posts

சங்கநாயக்க தேரரைச் சந்தித்து சுகம் விசாரித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

464 பேருக்கு கிராம உத்தியோகத்தர் நியமனங்கள்

இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது புகையிரத பணிப்புறக்கணிப்பு