உள்நாடு

புனித அல்-குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ் அப்துல்லாஹ்வை கௌரவித்த மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையும் மக்களும்

மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில்‌ மாவடிப்பள்ளியைச் சேர்ந்த பிறவியிலேயே தனது இரு கண்பார்வையை இழந்து” இந்த உலகத்தை நான் பார்க்கவில்லை என்றாலும் இந்த உலகம் என்னை பார்க்க வேண்டும்” என்ற ஒரு குறிக்கோளோடு அல்-குர்ஆனை மனனம் இட்டு ஹாபிழாக பட்டம் பெற்றுள்ள அல் ஹாபிழ் அப்துல் அமீர் அப்துல்லாஹ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை ஜும்ஆ வை தொடர்ந்து மாவடிப்பள்ளி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம்.ஐ.எம். மனாப் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கண்ணியமிக்க உலமாக்கள், மாவடிப்பள்ளி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், புத்தி ஜீவிகள், மசூரா சபை உறுப்பினர்கள், ஊர்மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,076 பேர் கைது

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா இழப்பீடு

editor

ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளை சந்தித்த ஹரீஸ்!