உள்நாடு

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு, பயணிகளுக்காக நாளை (8) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விசேட பேருந்து சேவையினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு பெஸ்ட்டியன் மாவத்தை பிரதான பேருந்து மையத்திற்கு மேலதிகமாக கடவத்தை, கடுவலை மற்றும் மாக்கும்புர உள்ளிட்ட மையங்களில் இருந்தும் இந்த விசேட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.

இந்த பேருந்து சேவைகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ள நிலையில், இரண்டாம் கட்டமானது பயணிகளின் கோரிக்கைக்கு அமைய முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவையானளவு எரிபொருள் கிடைக்கப்பெறாவிட்டால், புத்தாண்டு பேருந்து சேவையினை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா : மேலும் 09 பேர் பலி

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு – பிரதமர் ஹரிணி

editor

பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியும் – சுகாதாரப் பணிப்பாளர்