வகைப்படுத்தப்படாத

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ராட்டினத்தில் சிக்கிய 8 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

(UTV|FRANCE)-பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பிரித்தானியா பிராந்தியத்தின் தலைநகர் ரென்னஸ். இங்கு நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அதிக உயரத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கும் ஒரு ராட்டினத்தில் சிறுவர்கள் உள்பட 8 பேர் ஏறி அமர்ந்தனர். கீழே இருந்து புறப்பட்டு 170 அடி உயரத்துக்கு சென்ற அந்த ராட்டினம் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டு, மேல் பகுதியிலேயே நின்றுவிட்டது.

இதனால் ராட்டினத்தில் இருந்த அனைவரும் பயத்தில் அலறி துடித்தனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ராட்டினத்தில் சிக்கியவர்களை பத்திரமாக கீழே இறக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, ராட்டினத்தில் சிக்கிய 8 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

 

 

 

Related posts

ஶ்ரீதேவியின் பூதவுடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் தாமதம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அரசியல் கட்சிகளிடையே மோதல்: மூவர் காயம்