முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் அழைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் இன்று (11) விடேச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், முன்னாள் ஜனாதிபதியின் கவனம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மீது ஈர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியை அழைப்பதற்கான திகதி சிங்கள- தமிழ் புத்தாண்டு காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் தானும் தனது வழக்கறிஞர்களும் கொழும்பில் இருக்க மாட்டோம் என்பதால் வேறு திகதியைக் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பை வெளியிடுகையில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் வேகம் உலக சாதனை படைப்பதற்குச் சமம் என்றும் இதற்கு முன்பு இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ரணில் சுட்டிக்காட்டினார்.
ஏனெனில், சம்பந்தப்பட்ட அழைப்புக் கடிதம், முன்னர் தான் அறிக்கை வெளியிடப்பட்டு 18 மணி நேரத்துக்குள், அதாவது இன்று (11) நண்பகல் 12:00 மணியளவில் தனது அலுவலகத்துக்குக் கிடைத்ததுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.