(UTV | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, எதிர்வரும் ஏப்ரல் புத்தாண்டு காலப்பகுதியில், பயணக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஏப்ரல் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்புக்கு பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், கொவிட் தொற்றாளர்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதென, சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த மேலும் தெரிவித்துள்ளார்.