(UTV|கம்பஹா) – வீரகுல கலகெடிஹேன பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, மங்கலதிரிய, மீரிகம, கலகெடிஹேன, பமுனுகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.