உள்நாடு

புதையல் தோண்டிய தொல்பொருள் உத்தியோகத்தர் கைது

(UTV | திருகோணமலை) –    புதையல் தோண்டிய தொல்பொருள் உத்தியோகத்தர்  உட்பட 6 பேர்  கைது

திருகோணமலை மாவட்ட அபயபுர பகுதியில் புதையல் தோண்டிய குற்றத்தின் பெயரில் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடையத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொண்ட நடவடிக்கையில்
குறித்த பகுதியில் ( அபயபுர – லெனின் மாவத்தையில்) வீடொன்றில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த போது வீட்டு உரிமையாளர் உட்பட06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்கள் காலி, நீர்கொழும்பு, ,அம்பாறை, தீகவாபி,கந்தளாய் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 24, 35,, 28, 22 வயதையுடையவர்கள் எனவும் ,

இவ் 06 பேரையும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ரஷ்யாவிடமிருந்து 50,000 Sputnik V வந்தடைந்தது

இனி பேருந்துகளுக்கு நடத்துனர் தேவை ஏற்படாது

நாட்டின் ஆறு மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை