சூடான செய்திகள் 1

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த தடை

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் , கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடக்கம் எதிர்வரும் செப்டெம்பர் 10ம் திகதி வரை இவ்வாறு தடை விதித்து புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

சிங்கள தேசிய அமைப்பின் இணைப்பாளரான மெடில்லே பஞ்சலோக தேரர் மற்றும் இராவண பலய அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் உள்ளிட்டோருக்கே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், பேரணிகள் நடாத்தப்படும் போது சட்டரீதியானதாகவும் மற்றும் அமைதியானதாகவும் நடாத்திச் செல்ல தடை இல்லை எனவும், கலகம், குழப்பத்தை ஏற்படத்தும் எவ்வித செயற்பாடுகளுக்கும் அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு வாகனங்களுக்கு தடை, விபத்து, தொந்தரவு ஏற்படும் வகையில் பேரணி நடாத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும், அமைதியைக் சீர்குலைக்கும் சிறியளவிலான செயற்பாடுகளேனும் இடம்பெறக்கூடாது எனவும் இந்த நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அம்பாறை நகரில் மிலேச்சத்தனமான தாக்குதல்…

லங்கம பாசல ஹொந்தம பாசல திட்டத்தின் கீழ் ஹாரிஸ்பத்துவ தொகுதியில் 2 பாடசாலை கட்டிடங்கள் கையளிப்பு.

கொரோனாவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்