கேளிக்கை

புதிய பெயரில் ரிலீசாகும் ரஜினியின் 2.0

(UTV|INDIA) இந்திய திரைப்படங்களுக்கு சமீபகாலமாக சீனாவில் அதிக வரவேற்பு உள்ளது. அமீர்கானின் ‘தங்கல்’, ராஜமவுலியின் ‘பாகுபலி’ படங்கள் சீனாவில் அதிக தியேட்டர்களில் ரிலீசாகி வசூலை குவித்தன.

ரஜினிகாந்த் நடிக்க ‌ஷங்கர் இயக்கிய படம் 2.0. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு பிரம்மாண்டமாக உருவான இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் 29-ந் தேதி வெளியானது. ரஜினியின் படங்களுக்கு ஜப்பானில் வரவேற்பு உள்ளது. அதுபோல் சீனாவிலும் மார்க்கெட் உருவாகி இருக்கிறது. 2.0 படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இந்த படத்துக்கு 2.0 என்று சுருக்கமாக டைட்டில் வைக்கப்பட்டது. ஆனால் சீனாவில் நீண்ட தலைப்புடன் ரிலீஸ் ஆக இருக்கிறது. பாலிவுட் ரோபோ 2.0 ரிசர்கென்ஸ் (பாலிவுட் ரோபோ 2.0வின் எழுச்சி) என படத்துக்கு புதிதாக பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தில் சீன ரசிகர்களை கவர்வதற்காக மேலும் சில வி.எப்.எக்ஸ் (கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்) காட்சிகளும் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன.

 

 

 

Related posts

பிரபல பாடகி காலமானார்

‘நெற்றிக்கண்’ – விமர்சனம்

ராட்சஸி ஆகிறார் ஜோதிகா!