அரசியல்உள்நாடு

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை

10 வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன்படி நாளை முதல் இணையவழி முறைமை ஊடாக புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை பதிவு செய்துக் கொள்ளலாம் என பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்வதற்காக எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இரண்டு தகவல் சாளரங்களை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற மரபு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் 03 நாள் செயலமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

25, 26, 27 ஆகிய திகதிகளில் செயலமர்வு நடைபெறுகிறது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று (16) வெளியிடப்பட உள்ளது.

புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21ம் திகதி காலை 10 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யால சம்பவம் : பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு

‘ஒமிக்ரோன் உள்நுழைய இடமளியோம்’

இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்