கேளிக்கை

புதிய பட அறிவிப்பை வெளியிட்ட ஜீவா

(UTV |  சென்னை) – முன்னனி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜீவா, தன்னுடைய பிறந்த நாளில் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

ஆசை ஆசையாய் படத்தில் நடிகராக அறிமுகமானவர் ஜீவா. இவர் ராம், டிஷ்யும், ஈ, நண்பன், நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற 83 திரைப்படத்தில் இந்திய அணியின் விளையாட்டு வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகர் ஜீவா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். தன் பிறந்தநாளை முன்னிட்டு தான் நடிக்கு புதிய படத்தின் அறிவிப்பை இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு ‘வரலாறு முக்கியம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

Related posts

‘கே.ஜி.எஃப் 2’ : செப்டம்பரில்

காதலனுடன் சுவாதிக்கு டும் டும் டும்

மீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா…