அரசியல்

புதிய தொடருக்கு செல்லாத சிறுபான்மை கட்சிகள்: வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி!

(UTV | கொழும்பு) –  ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (07) வைபவரீதியாக ஆரம்பித்துவைத்திருந்தார்.

இதன் போது, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அணியினர் ஜனாதிபதி பேச ஆரம்பித்த போது எழுந்து வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவை வெளிப்படுத்தியதுடன்,

சிறுபான்மை கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மை கட்சியினர் இன்றைய புதிய அமர்வுக்கு செல்லாமால் பகிஸ்கரிப்பு செய்தனர்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு கடந்த 26ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

அரசியலமைப்பின் 70 வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய அமர்வு தொடங்கும் போது, நாடாளுமன்ற அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்கும் அரசாங்கத்தின் கொள்கை விளக்கத்தை முன்வைப்பதற்கும் ஜனாதிபதி சந்தர்ப்பம் கிடைக்கிறது.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம், எதிர்வரும் 8ஆம், 9ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவுக்கு கொண்டுவரப்படும் போது, அதுவரை சபையில் பரிசீலிக்கப்படாத கேள்விகள் மற்றும் பிரேரணைகள் தானாக ரத்தாகும்.

மேலும், நாடாளுமன்றத்தின் இணைப்புக் குழு, உயர் பதவிகளுக்கான குழு, தெரிவுக்குழுக்கள் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் தவிர மற்ற அனைத்துக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் புதிய அமர்வின் தொடக்கத்தின் பின்னர் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு 20 ஓகஸ்ட் 2020 முதல் 12 டிசம்பர் 2021 வரையிலும், இரண்டாவது அமர்வு 18 ஜனவரி 2022 முதல் 28 ஜூலை 2022 வரையிலும் நடைபெற்றது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு 03 ஓகஸ்ட் 2022 முதல் 27 ஜனவரி 2023 வரை நடைபெற்றது. ஜனவரி 26ஆம் திகதி நள்ளிரவில் கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் 106 நாட்கள் சபை அமர்வு இடம்பெற்றிருந்தது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போலிக்கருத்துக்கணிப்புகள் தொடர்பில் மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை

editor

நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும் – சஜித்

editor

பெருந்தெருக்கள் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர பணிப்பு

editor