வகைப்படுத்தப்படாத

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – மீனவர்களுக்கு எச்சரிக்கை

(UTV|INDIA)-வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை அடுத்துள்ள இந்திய கடல் பகுதியில் நாளை (இன்று) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எனவே தெற்கு வங்கக்கடல் தென்மேற்கு வங்கக்கடல் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு 6 ஆம் திகதி மற்றும் 7 ஆம் திகதி மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட’டுள்ளார்கள்.

குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை வரை நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது குமரிக்கடல் முதல் வடக்கு கேரளா பகுதி வரை நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலைய பணிப்பாளர் பாலச்சந்திரன்
சென்னையில் ஒரே நாளில் மழை,வெயில் மற்றும் பனிப்பொழிவு என 3 பருவநிலை நிலவுவதற்கு காரணம் என்ன? என்பதற்குக்காரணம் ‘தற்போது வலுவான வானிலை இல்லை. காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து செல்லும்போது அதனுடைய அழுத்தத்தால் பரவலாக மழை பெய்கிறது. எங்கெல்லாம் காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்க்கும் சூழல் நிலவுகிறதோ, அங்கெல்லாம் மழை பெய்கிறது. இதில் பகல் நேரத்துக்கும், இரவு நேரத்துக்கும் வித்தியாசம் இருப்பதேயாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

‘Stray Syrian anti-aircraft missile’ hits northern Cyprus

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

පේරාදෙණිය සරසවියට නව පාඨමාලා 02 ක්