வகைப்படுத்தப்படாத

புதிய களனி பாலத்தை பயன்படுத்துவோருக்கான அறிவிப்பு !

(UTV | கொழும்பு) –  புதிய களனி பாலத்தில் இருந்து துறைமுகத்திற்கு செல்லும் வீதி திருத்த வேலை காரணமாக திங்கட்கிழமை (12) வரை மூடப்படும் என நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதன்படி கட்டுநாயக்காவிலிருந்து களனி பாலத்திற்குள் நுழைந்து துறைமுகத்தை நோக்கி செல்லும் வீதி நேற்று இரவு 9 மணி முதல் மூடப்பட்டுள்ளதுடன், திங்கட்கிழமை (12) காலை 5 மணி வரை இது அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒருகொடவத்தை சந்திப்பில் இருந்து களனி பாலத்திற்குள் நுழைவது மற்றும் பாலத்தின் நடுப்பகுதியில் இருந்து துறைமுக நுழைவாயிலுக்குள் நுழைவது மூடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் ஒருகொட வத்தையிலிருந்து கட்டுநாயக்கவிற்குள் பிரவேசித்து கட்டுநாயக்கவிற்கு செல்லும் வாகனங்களுக்கு இந்த தடை ஏற்படாது என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருகொடவத்தை – வெல்லம்பிட்டிய வீதியில் தெமட்டகொட, பேலியகொட, நீர்கொழும்பு வீதி, மீன் சந்தைக்கு அருகில், கண்டி வீதி, தோரண சந்தி ஆகிய இடங்களில் இது தொடர்பில் அறிவிப்புப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு

680 மில்லியன் டொலர் ஊழல்

மத்திய வங்கி விதித்த தடையில் மாற்றம் இல்லை