உலகம்

புதிய கட்சியை ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய்!

(UTV | கொழும்பு) –

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்ற நிலையில், தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில்,நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றதாக தகவல் வெளியானது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதையும், புதிய கட்சி தொடங்குவதையும் இதுவரை வெளிப்படையாக எங்கும் அறிவிக்கவில்லை.இந்நிலையிலேயே முதல்முறையாக, தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதையடுத்து தமிழக அரசியலில் இந்த விடயம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதி சடங்குக்கு ரூ.100 கோடி செலவு

நெஞ்சு வலி காரணமாக மன்மோகன் சிங் வைத்தியசாலையில்

கனடாவும் அனுமதி