உள்நாடு

புதிய இராணுவத் தளபதி நியமிப்பு

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி அவர் இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாவார்.

மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக செயற்பட்டு வந்தார்.

தற்போதைய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது இரண்டாவது சேவை நீடிப்புக்கு அமைய இன்று வரை சேவையாற்றி வந்தார்.

இதேவேளை, இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

செவ்வாயன்று எதிர்ப்பு தினமாக அறிவிப்பு

நாட்டில் தற்போது மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை – ரவிகரன்