வணிகம்

புதிய இரண்டு ஐஸ் கிரீம்களை அறிமுகப்படுத்தும் Pelwatte

(UTV|கொழும்பு) – உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte புத்தம் புதிய இரண்டு சுவைகளில் ஐஸ் கிரீம்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரம்பரிய சுவைகளுக்கு மேலதிகமாக இந்த தனித்துவமான பளூடா மற்றும் இஞ்சி பிஸ்கட் சுவைகள் ஐஸ்கிரீம் பிரியர்களை கவர்ந்திழுப்பதுடன், அவர்கள் Pelwatte ஐஸ் கிரீம்களுக்கே உரிய மென்மையான, கிறீம் தன்மையை அனுபவித்து மகிழும் வாய்ப்பை வழங்குகின்றது.

இலங்கை ஐஸ்கிரீம் சூழலானது வண்ணம் மற்றும் சுவையின் அடிப்படையில் பல ஐஸ் கிரீம் வகைகளுடன் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. Pelwatteயின் ஐஸ் கிரீம்கள் அதன் தனித்துவமான சுவை கலவைகளுக்கும், மறக்கமுடியாத சுவைக்கும் பெயர் பெற்றவை. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பளூடா மற்றும் இஞ்சி பிஸ்கட் ஐஸ் கிரீம் சுவைகளும் இதே வழியையே பின்பற்றுகின்றன. இதன் செழுமையான சுவையின் இரகசியம் என்னவெனில், ஐஸ் கிரீம்களின் உற்பத்தியானது நமது பால் விவசாயிகளால் வழங்கப்படும் புதிய பால் கொழுப்பால் உற்பத்தி செய்யப்படுகின்றமையே. எனவே, Pelwatte இல் தயாரிக்கப்படும் ஐஸ் கிரீம் ஒரு செழுமையான கிறீம் தன்மையைக் கொண்டுள்ளதுடன், இது ஒருவரை மேலும் சுவைக்கத் தூண்டும், என ஐஸ் கிரீம் உற்பத்தி வரிசை மற்றும் புதிய சுவைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் Pelwatte Dairy Industries இன் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க குறிப்பிடுகிறார்.

பளூடா ஐஸ் கிரீமில் ஒரு இனிமையான, புத்துணர்ச்சியூட்டும், மென்மையான, குளிர்ந்த பளூடா ஐஸ் சுவை உள்ளது. மேலும் இது PDIL இல் உள்ள உணர்ச்சி மதிப்பீடுகளின் படி இது மிகவும் விரும்பத்தக்க உணர்ச்சி பண்புகளைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது இஞ்சி பிஸ்கட் ஐஸ்கிரீம் இனிப்பு, கிரீம் மற்றும் இஞ்சி சுவையுடன் நிறைந்துள்ளது மற்றும் மிக உயர்ந்த உணர்ச்சி பண்புகளைக் கொண்ட நுகர்வோருக்கு புதிய அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது.

பளூடா மற்றும் இஞ்சி பிஸ்கட் ஐஸ் கிரீம் SLS நியமங்களுக்கு இணங்க தயாரிக்கப்படுகின்றன. Pelwatte ஐஸ் கிரீம் நிறை அடிப்டையில் குறைந்தது 32% மொத்த திடப்பொருட்களைக் கொண்டுள்ளது, கொழுப்பின் சதவீதம் நிறை அடிப்டையில் குறைந்தது 8% என்பதுடன், சுக்ரோஸ் அளவு நிறை அடிப்டையில் கூடியது 16% மற்றும் கொழுப்பு அல்லாத பால் திடப்பொருட்களின் சதவீதம் நிறை அடிப்டையில் குறைந்தது 8% ஆகும்.

Pelwatte பல வகையான ஐஸ் கிரீம் தயாரிப்புகளைக் கொண்டுள்ளதுடன், முதற்தர மற்றும் பொருளாதார வரிசையின் கீழ் முற்றிலும் புதிய இரண்டு தயாரிப்பு வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்தர வரிசையானது; cream cheese sour cherry, Peanut butter caramel choco chips மற்றும் nuts ஐஸ் கிரீம், Date ஐஸ் கிரீம், Ferrero Rocherஐஸ் கிரீம், Cheese cake strawberry ஐஸ் கிரீம், Mint with chocolate chips ஐஸ் கிரீம், Amarilla ஐஸ் கிரீம், Snickers ஐஸ் கிரீம் ஆகியவற்றை உள்ளடக்கவுள்ளது.

தற்போது Vanilla, Chocolate, Fruit & Nut, Banana, Mango, Strawberry, Coconut with Cardamom Ice cream, Coffee with Cardamom, Blueberry மற்றும் Butterscotch ஆகிய சுவைகளில் ஐஸ் கிரீம்கள் கிடைக்கின்றன.

Related posts

சுற்றுலாப் பயணிகளுக்குத் நாரங்கல மலைப்பகுதிக்கு பிரவேசிக்க தடை

மெனிங் சந்தை அடுத்த வருடம் பேலியாகொடையில் – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

INSYS 2017 நிகழ்வில் SLIIT மாணவர்கள் தமது புத்தாக்கமான திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்