உள்நாடு

புதிய அரசே தற்போதைய தேவை – லக்‌ஷ்மன் கிரியெல்ல

(UTV | கொழும்பு) –

புதிய அரசே எமது நாட்டுக்குத் தேவைப்படுகின்றது. அதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிதான் இந்த நாட்டை வங்குரோத்து அடைய வைத்தது. அந்தத் தரப்புடன்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருக்கின்றார். இவ்வாறு நாட்டை வங்குரோத்து அடைய வைத்தவர்களால் நாட்டை மீட்க முடியுமா? முடியாது. அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிப்பதற்குச் சாத்தியமே இல்லை.

எனவே, புதியதொரு அரசே எமது நாட்டுக்குத் தேவைப்படுகின்றது. அதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

பிறப்புச் சான்றிதழ் தொடர்பிலான புதிய அறிவித்தல்

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு