உள்நாடு

புதிய அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் வர்த்தமானி வெளியானது

(UTV | கொழும்பு) – புதிய அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது 17 அமைச்சரவை அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் முதன்முறையாக அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், 21 புதிய இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்றிருந்தனர்.

இந்நிலையில், புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு ஒருவாரம் கடந்துள்ள போதிலும், தற்பொழுதே அமைச்சுகளின் விடதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடர்பில் இன்று முதல் விசேட கண்காணிப்பு

இன்றும் சுகாதார பணிப்புறக்கணிப்பு!

கொழும்பு துறைமுகத்திற்கு 553 மில்லியன் டொலர் முதலீடு – அமெரிக்க தூதரகம்.