உள்நாடு

புதிய அமைச்சரவை நியமனம் ஒரு ‘சிஸ்டம் சேஞ்ஜ்’ – ஜனாதி

(UTV | கொழும்பு) –  அமைச்சர்களாக எந்தவொரு கூடுதல் சலுகைகளையும் பயன்படுத்த வேண்டாம் என புதிய அமைச்சரவை அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

17 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (18) காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“நான் சிரேஷ்டர்களை கருத்தில் கொள்ளாது புதிய அமைச்சர்களை நியமித்துள்ளேன். அமைச்சுப் பதவிகள் வரப்பிரசாதம் அல்ல பாரிய பொறுப்பு. அமைச்சர்கள் என்று கூடிய சலுகைகளை பயன்படுத்த வேண்டாம் என நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். நேர்மையான சுத்தமான சேவையினை அர்ப்பணிப்புடன் வழங்குவீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன். அதேபோல் உங்களுக்கு கீழ் உள்ள நிறுவனங்களிலும் ஊழல்கள் அற்ற பொதுமக்களுக்காக சேவை செய்யும், நிறுவனங்களாக மாற்றுங்கள்.

இன்று, ஒரு பாரிய நிதி நெருக்கடியின் கீழ் அரச நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றினை சரி செய்ய வேண்டும். இன்று இந்த நெருக்கடி காரணமாக மக்கள் கோரும் ‘சிஸ்டம் சேஞ்ஜ்’ இனை செய்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும், எங்களுக்கு ஒத்துழைக்குமாறு நான் இந்த இளைஞர்களையும் அழைக்கிறேன். “

Related posts

பொதுத்தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல் பற்றிய தகவல்

குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல்