வகைப்படுத்தப்படாத

புதிய அதி உயர் தன்மையைக் கொண்ட உந்துகணையை வெற்றிகரமாக பரீட்சித்துள்ள வட கொரியா

(UDHAYAM, COLOMBO) – வட கொரியா புதிய அதி உயர் தன்மையைக் கொண்ட உந்துகணை இயந்திரம் ஒன்றை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவின் உந்துகணை பிரயோக நடவடிக்கைகளுக்காக அளப்பரிய பங்களிப்பினை இதன் மூலம் பெற முடியும் என வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் யுன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரீட்சை நடவடிக்கைகளை அவர் நேரடியாக விஞ்ஞானிகளுடன் இணைந்து பார்வையிட்டுள்ளார்.

இதன் மூலம் வட கொரியா செய்மதியினை அண்டவெளிக்கு அனுப்பும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச தரத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கிழக்கு ஆசிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு கட்டமாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் ரில்லசன் சீனா சென்றுள்ளார்.

இவர் பயணிக்கும் ஒவ்வொரு கிழக்கு ஆசிய நாட்டு தலைவர்களுடன் உரையாற்றும் போது, வடக்கு கொரிய அணு தொடர்பான விடயங்களுக்கு முக்கிய கவனம் செலுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ராஜாங்க செயலாளர், தென் கொரிய தலைவரை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாடிய போது, வடகொரியாவின் நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கும், தென் கொரியாவிற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதற்கு மாற்று நடவடிக்கையாக இராணுவ பலத்தை பிரயோகிப்பதா என்பது குறித்து ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலையகம் விஜயம்

Former DIG Dharmasiri released on bail

மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மீதொட்டமுல்ல மக்கள்