உள்நாடு

“புதிதாக மூவாயிரம் தாதியர்களை சேவையில் இணைக்க தீர்மானம் “

புதிதாக மூவாயிரம் தாதியர்களை சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தாதியர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதாகவும் மேன்முறையீட்டு காலத்தின் பின்னர் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் 45,000 தாதியர்கள் சேவையில் இருப்பதாகவும் பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில் தாதியர் வெற்றிடங்களை அவசரமாக நிரப்புமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயிரியல் மற்றும் கணிதப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தற்போது சுமார் 3100 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 3800 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொழும்பு நீலச் சமர் கிரிக்கெட் போட்டி- பார்வையிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இன்று மீண்டும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது – தேங்காய்க்கு கூட வரிசைகள் – சஜித்

editor

நாளை 24 மணி நேர நீர்வெட்டு