வகைப்படுத்தப்படாத

புதிதாக பதிவு செய்வதற்காக 95 கட்சிகள விண்ணப்பம்

(UDHAYAM, COLOMBO) – புதிதாக பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ள அரசியல் கட்சிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் அடுத்த வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக 95 கட்சிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் போது 16 கட்சிகள் மீண்டும் அழைக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் வியாழக்கிழமை கூடவுள்ளது.

தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 64 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலக வர்த்தக மையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள்

வாகன இறக்குமதி தொடர்பில் நிதியமைச்சின் எதிர்வுகூறல்!

Dr. Shafi granted bail [UPDATE]