சூடான செய்திகள் 1

புகையிரத கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்

(UTV|COLOMBO)-அதிகரிக்கப்பட்ட தொடரூந்து பயணக்கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள ஆரம்பக் கட்டணங்களில் மாற்றம் இல்லை என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மூன்றாம் வகுப்பு ஆகக் குறைந்த கட்டணம் 10 ரூபா, இரண்டாம் வகுப்பு ஆகக் குறைந்த கட்டணம் 20 ரூபா மற்றும் முதலாம் வகுப்பு ஆகக் குறைந்த கட்டணம் 40 ரூபா என்ற கட்டணங்களில் எவ்வித அதிகரிப்பும் ஏற்படுத்தப்பட மாட்டாது.

எவ்வாறிருப்பினும், ஆகக் குறைந்த கட்டணங்களை கவனத்திற் கொள்ளும்போது, நடைமுறையில் உள்ள 10 கிலோமீற்றருக்கு மட்டுப்படுத்தப்பட்ட திருத்தங்கள் 7ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் களனி ஆகிய பகுதிகளுக்கான மூன்று வகுப்பு கட்டணங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், கோட்டை முதல் தெஹிவளைக்கான முதலாம் வகுப்பு கட்டணம் 40 ரூபாவிலிருந்து 60 ரூபாவாகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 20 ரூபாவிலிருந்து 30 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

15 ரூபாவாக அறவிடப்படும் மூன்றாம் வகுப்பு கட்டணத்தில் மாற்றம் ஏற்படவில்லை.

நுகேகொடைக்கான மூன்றாம் வகுப்பு கட்டணம் 15 ரூபாவிலிருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான கட்டணங்களில் மாற்றம் ஏற்படவில்லை.

கோட்டையிலிருந்து றாகமவிற்கு முதலாம் வகுப்புக்காக அறவிடப்பட்ட 60 ரூபா கட்டணம் 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 40 ரூபா என்ற இரண்டாம் வகுப்பு கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.

20 ரூபாவாக அறவிடப்பட்ட மூன்றாம் வகுப்பு கட்டணம் 25 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கம்பாஹாவுக்கான 100 ரூபா என்ற முதலாம் வகுப்பு கட்டணம் 120 ரூபாவாகவும், இரண்டாம் வகுப்புக்கான 60 ரூபா கட்டணம் 70 ரூபாவாகவும், மூன்றாம் வகுப்புக்கான 35 ரூபா கட்டணம் 40 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்புக்கான 140 ரூபா என்ற முதலாம் வகுப்பு கட்டணம் 160 ரூபாவாகவும், இரண்டாம் வகுப்புக்கான 80 ரூபா கட்டணம் 90 ரூபாவாகவும், மூன்றாம் வகுப்புக்கான 45 ரூபா கட்டணம் 55 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், அளுத்கமவுக்கான மூன்றாம் வகுப்புக்கான 200 ரூபா கட்டணம் 240 ரூபாவாகவும், இரண்டாம் வகுப்புக்கான 110 ரூபா கட்டணம் 140 ரூபாவாகவும், 60 ரூபா என்ற மூன்றாம் வகுப்புக் கட்டணம் 70 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

220 ரூபா என்ற அவிசாவளைக்கான முதலாம் வகுப்பு கட்டணம் 240 ரூபாவாகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 110 ரூபாவிலிருந்து 140 ரூபாவாகவும், 65 ரூபா என்ற மூன்றாம் வகுப்பு கட்டணம் 80 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குருநாகலுக்கான 300 ரூபா என்ற முதலாம் வகுப்புக்கான கட்டணம் 360 ரூபாவாகவும், இரண்டாம் வகுப்புக்கான 170 ரூபா கட்டணம் 210 ரூபாவாகவும், மூன்றாம் வகுப்பு கட்டணம் 95 ரூபாவிலிருந்து 115 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கண்டிக்கான முதலாம் வகுப்பு கட்டணம் 360 ரூபாவிலிருந்து 440 ரூபாவாகவும், 200 ரூபா என்ற இரண்டாம் வகுப்பு கட்டணம் 250 ரூபாவாகவும், 110 ரூபா என்ற மூன்றாம் வகுப்பு கட்டணம் 140 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹட்டனுக்கான 480 ரூபா என்ற முதலாம் வகுப்பு கட்டணம் 580 ரூபாவாகவும், 260 ரூபா என்ற இரண்டாம் வகுப்பு கட்டணம் 330 ரூபாவாகவும், 145 என்ற மூன்றாம் வகுப்பு கட்டணம் 190 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பதுளைக்கான 680 ரூபா என்ற மூன்றாம் வகுப்பு கட்டணம் 860 ரூபாவாகவும், 380 என்ற இரண்டாம் வகுப்பு கட்டணம் 490 ரூபாவாகவும், மூன்றாம் வகுப்பு கட்டணம் 205 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும் உயர்த்தப்படவுள்ளது.

திருகோணமலைக்கான முதலாம் வகுப்புக்கான கட்டணம் 680 ரூபாவிலிருந்து 860 ரூபாவாகவும், 380 ரூபா என்ற இரண்டாம் வகுப்பு கட்டணம் 500 ரூபாவாவும், 210 என்ற மூன்றாம் வகுப்பு கட்டணம் 280 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மட்டக்களப்புக்கான முதலாம் வகுப்பு கட்டணம் 760 ரூபாவிலிருந்து 980 ரூபாவாகவும், 430 என்ற இரண்டாம் வகுப்பு கட்டணம் 570 ரூபாவாகவும், 235 என்ற 315 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கான முதலாம் வகுப்பு கட்டணம் ஆயிரத்து 40 ரூபாவிலிருந்து 1080 ரூபாவாகவும், 570 ரூபா என்ற 630 ரூபாவாகவும், 320 ரூபா என்ற மூன்றாம் வகுப்பு கட்டணம் 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் கொழும்பு – யாழ்ப்பாணம் வரை புகையிர சேவை…

ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்