உள்நாடு

புகையிரதத்தில் தொங்கிய நிலையில் பயணம் செய்த சீன யுவதிக்கு இலங்கையில் நேர்ந்த சோகம்

புகையிரதத்தில் தொங்கிய நிலையில் நேற்று (07) பிற்பகல் பயணம் செய்த சீன யுவதி ஒருவர் வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் தவறி விழுவதை அவரது நண்பி தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

நண்பி கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

புகையிரதில் பயணம் செய்து கொண்டிருந்த போது மரக்கிளை ஒன்று தலையில் மோதியதில் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.

புதரில் விழுந்ததால் சீன யுவதிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் சடலம் மீட்பு

‘எரிபொருளுக்கான முழுப் பணம் செலுத்தப்பட்டது’ – காஞ்சனா

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பம்