வணிகம்

புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் கொழும்பில் Melodies of Folk 2018 நிகழ்வு ஏற்பாடு

(UTV|COLOMBO)-இலங்கை நோர்வே இசை கூட்டுறவு அமைப்பினால் உள்நாட்டு மற்றும் சர்வதேச இசைக்கலைஞர்களின் பங்குபற்றலுடன் Melodies of Folk 2018 நிகழ்வு கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு கொழும்பு விகாரமகாதேவி திறந்த வெளி கலையரங்கில் ஜனவரி 28ம் திகதி பி.ப 6.30 மணி முதல் நடைபெறவுள்ளது. பொது மக்கள் இந்த நிகழ்ச்சியை முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும் என்பதுடன், உள்நாட்டு புகழ்பெற்ற இசைக்குழுவினரான ரவிபந்து மேள வாத்தியக்குழுவினர், நாட்ரோ மற்றும் நட்டன்ட, பலிபொனிக்ஸ், சந்தேசி ட்ரம்மர்ஸ், மியேசி ஜன சங்கீதக்குழு மற்றும் தமிழ் முரசு ஆகியவற்றுடன் சர்வதேச குழுவினரான பங்களாதேஷின் சிர்குத் குழுவும் பங்கேற்கவுள்ளன.

இலங்கையின் தனித்துவமான நாட்டுப்புற இசையை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் யாழ்ப்பாண இசை கொண்டாட்டம் மற்றும் காலி இசை கொண்டாட்டம் ஆகியவற்றிலிருந்து ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டு கடந்த ஒன்பது ஆண்டு காலமாக “Melodies of Folk” நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. இசைக்கலைஞர்கள் மத்தியில் தமது சமூகங்களினுள் திறமையை வெளிப்படுத்தக்கூடிய காலத்தில் ஏனையவர்களுக்கு போதியளவு சாதனங்கள் மற்றும் அணிகலன்கள் இல்லாமலிருந்த நிலையில் இந்த இரு கொண்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. யாழ்ப்பாண மற்றும் காலி இசைக் கொண்டாட்ட நிகழ்வுகள் இசைக்கலைஞர்களுக்கு தமது இசையின் பாரம்பரியத்தை மீள உணர்த்த வாய்ப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன், சர்வதேச இசைக்கலைஞர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்ள வாய்ப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.இதனூடாக பலருக்கு தமது திறமைகளுக்கு வரவேற்பு கிட்டியுள்ளது. Melodies of Folk  இந்த பாணியை தொடர்வதுடன், இதில் பங்கேற்கும் கலைஞர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் வௌ;வேறு சமூகங்களை பிரதிபலிப்பதுடன், பாரம்பரிய இசை முறைகளையும், புத்தாக்க இசைசார் கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்வைத்தொடர்ந்து, “ஆரளiஉ ளை கழச யுடட” எனும் நிகழ்வு குடும்பத்தின் அங்கத்தவர்களுக்கும், சிறுவர்களையும் இலக்காகக் கொண்டு அதே தினம் பி.ப. 9.30 மணி முதல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அக்கரைப்பற்று இஸ்லாமிய சமூக பாரம்பரிய கலாசார நிலையத்தின் கலைஞர்கள், மட்டகளப்பைச்சேர்ந்த போர்த்துக்கேய பேர்கர்கள், சிரம்படியைச்சேர்ந்த சிலோன் கஃபிர், அம்பலாங்கொடயைச்சேர்ந்த சாரங்க பொம்மலாட்ட குழுவினர், மட்டக்களப்பின் பறை மேளம் குழுவினர், முல்லைத்தீவின் கலைமகள் கலா மன்றம் வழங்கும் கரகாட்டம் மற்றும் முல்லைத்தீவின் குடமோதல் கும்மி, கொழும்பின் சந்தசி பீட் ட்ரம்மர்கள், பவர் ஒஃவ் பிளேயின் சுலோச்சனா திசாநாயக்க மற்றும் மியுசிக் மெட்டர்ஸ் போன்ற சிறுவர்களுக்கு நட்பான பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இலங்கை நோர்வே இசை கூட்டுறவு அமைப்பு (SLMNC) ரோயல் நோர்வே தூதரகத்தினால் நிறுவப்பட்டுள்ளதுடன், நோர்வே குல்துர்தாகென் மற்றும் சேவா லங்கா மையத்தினால் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதில் கலாசார விவகார அமைச்சின் நாட்டுப்புற இசை பாதுகாப்பு நிலையத்தின் பங்களிப்பும் வழங்கப்படுகிறது.
அனுமதி இலவசம், அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/2.jpg”]

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Rakuten Viber ஊடாக நான்கு மடங்கு அதிகமான அழைப்புகள் பதிவு

லீனா இஸ்பைரோ தனியார் நிறுவன நடவடிக்கைகள் ஆரம்பம்

கண்டி பிரதேசத்தில் கேபள் கார் திட்டம்