சூடான செய்திகள் 1

பீடிக்கான புகையிலைக்கு பப்பாசி இலைகளை உலர்த்தி ஒன்று சேர்க்கும் இடம் முற்றுகை

(UTV|COLOMBO) கலேவெல நபடகாவத்த புவக்பிட்டிய என்ற இடத்தில் பீடிக்கான புகையிலைக்கு பப்பாசி இலைகளை உலர்த்தி ஒன்று சேர்க்கும் இடம் ஒன்றை பொலிஸ் விஷேட அதிரடி படை முற்றுகையிட்டுள்ளது.

பாரிய அளவில் பப்பாசி இலைகளை உலர்த்துவதற்கு பெரும் எண்ணிக்கையிலான உழியர்களை பயன்படுத்தி இயந்திரத்தின் மூலம் வெட்டி எடுத்து செல்வதற்காக இவை வைக்கப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி பப்பாசி இலைகளை உலர்த்தி சிறியதாக வெட்டி அவுஸ்ரேலியாவுக்கு ஏற்றுமதி செய்வதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.மருந்து மூலிகையாக பயன்படுத்துவதற்கு இவை அங்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகின்றன.

மருந்து மூலப்பொருளாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் தயாரிப்பதற்கும் அரசாங்க மருந்தக கூட்டுத்தாபனம் அல்லது தேசிய ஆயுர்வேத திணைக்களத்தினால் எந்தவித அனுமதியும் இது தொடர்பாக பெற்றுக்கொள்ளவில்லை என்பதும் ஆரம்ப விசாரணையின் மூலம் தெரியவந்தது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

Related posts

தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை வேலைத்திட்டம்

கெக்கிராவயில் துப்பாக்கிச் சூடு

பால்மா, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது