சூடான செய்திகள் 1

“பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழாவில் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-இலங்கை வர்த்தக துறையில் விசேட அடைவுகளை வெளிப்படுத்தியுள்ள நிறுவனங்களை பாராட்டும் “பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழா நேற்று (12) பிற்பகல் கொழும்பு, சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டதுடன், சிறந்த வர்த்தக நிறுவனங்களை பாராட்டி விருதுகளையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

“பிஸ்னஸ் டுடே டொப் 30” என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருது விழாவில் வர்த்தக துறையில் 2017, 2018 காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க அடைவுகளை வெளிக்காட்டிய 30 வர்த்தக நிறுவனங்கள் பாராட்டப்பட்டன.

 

 

 

Related posts

போதைப் பொருளில் இருந்து தலைமுறையினரை பாதுகாக்க வேலைத்திட்டம் வேண்டும்-முன்னாள் ஜனாதிபதி

தேசிய அரசாங்கம் ஸ்தாபிப்பது குறித்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இன்று(06) பேச்சுவார்த்தை

ஹிஸ்புல்லா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்