உள்நாடு

பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) -கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (11) மட்டக்களப்பு குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வௌிநாடு செல்லத் தடை” ……!!

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்

மின் கட்டணத்திற்கு அரசினால் புதிய சலுகை