வகைப்படுத்தப்படாத

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர் உட்பட மேலும் நான்கு பேர் இன்று மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை அடுத்த மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த 2015 ஆண்டு ஒக்டோபர் 11ம் திகதி சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Related posts

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்

அமெரிக்காவுடன் மீண்டும் வர்த்தகம் செய்ய சீனா விருப்பம்…

டெல்லியில் கடும் பனிமூட்டம் – ரயில்களின் இயக்கம் தாமதம்