வகைப்படுத்தப்படாத

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திகாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவரை இன்று மட்டக்களப்பு நீதவான் எம்.கணேசராஜா முன் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு துறை தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 12 பேர் பலி

நகர மண்டபத்தின் அருகில் கடுமையான வாகன நெரிசல்

Tyler Skaggs: Los Angeles Angels pitcher dies aged 27