உள்நாடு

பிள்ளைகளின் பசியை போக்க தன்னுயிரை விட்ட தாய்

(UTV | கொழும்பு) – பிள்ளைகளின் பசியை போக்க தன்னுயிரை விட்ட தாய்

நான்கு பிள்ளைகளின் தாயொருவர் தனது பிள்ளைகளின் பசியை போக்குவதற்காக தனது தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் ஏறி பலாக்காய் பறிக்க முற்பட்ட போது மரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கம்பளை, நாரங்விட்ட பண்டாரவத்த பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய போபவிட்ட கெதர சாந்தி குமாரி என்ற நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாந்தியின் கணவர் தனியார் துப்புரவு நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

கணவனின் வருமானம் குடும்ப செலவுகளை பராமரிக்க போதாததால் அவர்கள் கடும் சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 10 ஆம் திகதி மதிய உணவை தயார் செய்வதற்காக பலாமரத்தில் ஏறி பலாக்காய் ஒன்றை பறிக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது மரத்தில் இருந்து தவறி விழுந்த குறித்த தாய் படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் கிராம மக்களின் உதவியுடன் கம்பளை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மிலேனியம் சவால் – சட்டமா அதிபர் நிராகரிப்பு

கிறிஸ்மஸ் தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட மதுபான விற்பனைக்கு கோரிக்கை

மரண தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி விடுதலை