உள்நாடு

பிலியந்தலை இரசாயன விற்பனை நிலையத்தில் தீ பரவல்

(UTV|கொழும்பு) – பிலியந்தலை, வேவெல சந்திக்கு அருகில் உள்ள இரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தல பொலிஸ் மற்றும் தெஹிவளை கல்கிஸ்ஸ நகர சபை தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீ பரவலுக்கு காரணம் இதுவரையில் அறியப்படவில்லை என்பதுடன், உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் எதுவும் இந்த அனர்த்ததில் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொரளை பகுதியில் ஒருவர் கூறிய ஆயுதங்களால் வெட்டி கொலை

இன்று திறக்கப்பட்ட பாடசாலைகளுக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் விடுமுறை

நாடாளுமன்ற உறுப்பினராக பசில் பதவியேற்றார்