வகைப்படுத்தப்படாத

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலுமொரு நபர் கைது

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய, இரண்டு பிரதான சந்தேகத்துக்குரியவர்களும் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல உதவியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேகத்துக்குரியவர்களும் சென்னையில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல உதவியவர் தலைமன்னார் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி இரவு பிலியந்தல பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காக சென்ற காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் காவற்துறை அதிகாரி ஒருவர் உட்பட 2 பேர் பலியானதுடன் 5 பேர் காயமடைந்தனர்.

அத்துடன், குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்றுவந்த சிறுமியும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வித்தியா படுகொலை வழக்கு – ‘விசாரணைமன்று’ அடிப்படையிலான 2ஆம் கட்ட விசாரணைகள் ஆரம்பம்!

ஒரு லட்சம் பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு திட்டம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மனு நிராகரிப்பு…