வகைப்படுத்தப்படாத

பிலியந்தலை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிறுமி பலி!

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலை -மொரடுவை அரச வங்கியொன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய மருத்தவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில ்சிறுமி இன்று அதிகாலை 3.45 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் எமது செய்திப்பிரிவிற்கு குறிப்பிட்டார்.

கடந்த 9ம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒரு காவற்துறை அதிகாரி கொல்லப்பட்டதுடன் , மேலும் இரண்டு அதிகாரிகள் காயமடைந்திருந்தனர்.

அதேபோல் , துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிறுமியின் சகோதரரொருவர் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related posts

மின் கட்டணம் உயர்வு?

மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரம் – அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன

Jeremy Renner starrer ‘Hawkeye’ series to introduce Kate Bishop