உள்நாடு

பிற்போடப்பட்ட பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம்

பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வடமத்திய மாகாண சாதாரண தரப் பரீட்சையை நாளை (03) முதல் 16 ஆம் திகதி வரை மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பௌத்தம் மற்றும் தமிழ் மொழி தவிர அனைத்து பாடங்களும் நாளை முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என்று வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சமன் குமார தெரிவித்தார்.

மேலும், இந்த தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் வடமத்திய மாகாணத்தில் உள்ள கோட்டக் கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டு, பரீட்சை நாளன்று சம்பந்தப்பட்ட அதிபர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சமன் குமார தெரிவித்தார்.

Related posts

மஹேலவிற்கு கிடைத்த புதிய பதவி

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு; சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

திஹாரி அல்-அஸ்ஹர் தேசிய கல்லூரியில் முயற்சியான்மை கழகம் ஸ்தாபிப்பு!