உள்நாடு

பிறப்புச் சான்றிதழ் பிரச்சினை – வெளியானது விசேட அறிவிப்பு

நாட்டில் அநேகமான சிறுவர்கள் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்களை வழங்க நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களம் ஆகியன இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தேசிய மட்டத்தில் முன்னெடுக்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் பிரதேச செயலக அலுவலக மட்டத்தில் சேவைபுரியும் சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரிகளினால் இந்த செற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.ஜே. பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் அந்த சிறுவர்களை பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்கான பணிகளும் அவர்களினாலேயே முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மாதம் (ஒக்டோபர்) முழுவதும் பிரதேச செயலகங்களினூடாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Related posts

தேசிய பாதுகாப்பு முக்கியமானது

உள்ளூர் பால்மாக்களின் விலைகளும் அதிகரிப்பு

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய கொழும்பு மற்றும் கம்பஹாவிற்கு சமையல் எரிவாயு