(UTV|CHINA)-சீனாவில் சான்வெய் பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று கிடப்பதை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்துள்ளார். அதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு வாலிபர் அந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி சென்றது பதிவாகி இருந்தது. அந்த பதிவைக் கொண்டு ஒரு நபரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அது தன்னுடைய குழந்தை என்றும் குழந்தை பிறந்தவுடன் ஊதா நிறத்தில் மாறியதால் குழந்தைக்கு கொடிய நோய் இருப்பதாக கருதி குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றதாகவும் கைது செய்யப்பட்ட நபர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், குளிரான சமயத்தில் குழந்தை பிறந்ததால், நிற மாற்றம் ஏற்பட்டதாகவும், மற்றபடி குழந்தை அரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். அந்த குழந்தை பின்னர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சரியான நேரத்தில் குழந்தையை காப்பாற்றிய பெண்மணியை பலர் பாராட்டி வருகின்றனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]