வகைப்படுத்தப்படாத

பிரேசில் சிறை கலவரத்தில் 40 கைதிகள் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகர் மனாஸ் அருகே ஒரு சிறைச்சாலை உள்ளது. அங்கு பல தரப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை பார்வையாளர் நேரத்தின்போது இரு தரப்பு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக வெடித்தது.

உடனே ஏராளமான பொலிசார் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருந்தும் கலவரத்தில் 40 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த மோதலுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.

 

 

 

 

Related posts

400க்கும் அதிக பாடசாலைகளுக்கு பூட்டு

பள்ளத்தில் பேரூந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் உயிரிழப்பு

Don Cheadle joins “Space Jam 2” cast