உலகம்

பிரேசில் ஒரே நாளில் 29 ஆயிரம் பேருக்கு கொரோனா

(UTV|கொவிட்-19)- பிரேசில் ஒரே நாளில் 29 ஆயிரம் பேர் கொரோனா அவைராஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், பிரேசில் நாட்டில் தீவிரமடைந்துள்ளது.

அங்கு ஒரே நாளில் 29,526 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,180 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 468,338 ஆக அதிகரித்துள்ளதுடன், 27,944 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதுடன், அதைத்தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மியன்மாரில் மேலும் நீடிக்கப்பட்ட அவசரநிலை!

கொரோனா ஒழிப்பின் எதிர்பார்ப்பு சாத்தியமற்றது

உண்மைத் தரவுகளை மறைக்கும் ஈரான்