வகைப்படுத்தப்படாத

பிரேசில் அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|BRAZIL)-பிரேசில் நாட்டில் இரும்புத் தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25 ஆம் திகதி உடைந்தது.

குறித்த அணையில் இருந்த தண்ணீரும், சேறும் சேரும் பெருக்கெடுத்து வெளியேறியதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

அப்பகுதியில் சகதியில் சிக்கிய பொதுமக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் என 305 பேரைக் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் சகதிக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஜப்பானில் திமிங்கல வேட்டை-ஜூலை மாதம் ஆரம்பம்

வடகொரியாதொடர்பில் கடுமையான தீர்மானம் எடுத்துள்ள அமெரிக்கா!!

Sir Kim Darroch: UK ambassador to US resigns in Trump leaks row