வகைப்படுத்தப்படாத

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…

(UTV|BRAZIL) பிரேசில் நாட்டு தலைநகரான சாவ் பாலோ நகரில் உள்ள பள்ளி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசிலில் இரு முன்னாள் மாணவர்கள் பாடசாலையொன்றிற்குள் நுழைந்து மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐந்து மாணவர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சுசானோ என்ற பகுதியில் உள்ள ரவுல் பிரேசில் கல்லூரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

17 மற்றும் 25 வயதுடைய இருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் , வன்முறையில் ஈடுபடுவதற்கு முன்னர் தங்கள் உறவினரான ஒருவரை சுட்டுக்கொன்று விட்டு அவரது காரை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட பாடசாலைக்கு அவர்கள் சென்றுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

வடமத்திய மாகாண சபை பிரச்சினை உயர் நீதிமன்றத்திற்கு

நோர்வூட் பகுதியில் விபத்து இருவர் படுகாயம்

கோட்பாடு மற்றும் செயல்முறை விளக்க அறிவு கொண்ட அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை – ஜனாதிபதி