உலகம்

பிரேசிலில் ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா

(UTV|கொவிட்-19) – பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் புதிதாக 6,462 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் உள்ள நிலையில், அந்த நாட்டில் இதுவரை மொத்தம் 79,685 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 5500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

இதேவேளை, ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,627 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது அந்நாட்டில் கொரோனா தொற்றுக்கு 31,572 பேர் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், இதுவரை 123,500 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் – இந்தியாவில் முதல் உயிரிழப்பு

ஜார்ஜ் ஃப்ளாய்ட் தீர்ப்பில் முன்னாள் பொலிசார் குற்றவாளி

காசா போருக்கு எதிராக ஜோர்டான், துருக்கி, துனீசியாவில் வெடித்த போராட்டங்கள்!