விளையாட்டு

பிரெஞ்ச் டென்னிஸ் போட்டித் தொடர்கள் திட்டமிட்டவாறு நடைபெறும்

(UTV | பிரான்சு ) – 2020ம் ஆண்டிற்கான பிரெஞ்ச் டென்னிஸ் போட்டித் தொடர்கள் திட்டமிட்டவாறு இந்த வருடம் நடைபெறும் என, பிரெஞ்ச் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் பெர்னார்ட் கியுடிசெல்லி (Bernard Giudicelli) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் ஏற்பட்ட கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து கடந்த மே மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாக இருந்த பிரெஞ்ச் டென்னிஸ் போட்டித்தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பிரெஞ்ச் டென்னிஸ் போட்டித்தொடர்கள் திட்டமிட்டபடி எதிர்வரும் செப்டம்பர் மாத பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ளதாக பிரெஞ்சு டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த போட்டித்தொடர்கள் ரசிகர்களுடன் நடைபெறவுள்ள நிலையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்கும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

துனிசியாவை 2-1 என வீழ்த்தியது இங்கிலாந்து

கெயில் வெளியேறினார்

பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்களுக்கு அபராதம் – பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர்